மலையேற்றத்துக்கு சென்றபோது காயமடைந்த நபர்... உயிரைக் காக்க செல்லப்பிராணி செய்த செயல்
குரோவேஷியா நாட்டில் நண்பர்கள் சிலர் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது Grga Brkic என்பவர் மட்டும் வழி தப்பிவிட்ட நிலையில், ஓரிடத்தில் விழுந்து காயமடைந்துள்ளார் அவர்.
தங்கள் நண்பரைக் கண்டுபிடிக்க இயலாத மற்றவர்கள் உதவி கோரி செய்தி அனுப்ப, மீட்புக் குழுவினர் 30 பேர் அவரைத் தேடிப் புறப்பட்டுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 1,800 மீற்றர் உயரத்தில் உள்ள மலைப்பகுதியில், கடும் குளிரில் அவர்கள் Grga Brkicஐக் கண்டுபிடித்தபோது, அவரது செல்ல நாயான North, அவர் உடல் மீது சுருண்டு படுத்துக்கொண்டிருக்கிறது.
கடும் குளிரில் அந்த நாய் அவர் மீது படுத்திருந்ததாலேயே அதன் உடலில் உள்ள உஷ்ணம் காரணமாக அவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் மீட்புக் குழுவினர்.
தன் உயிரைக் காத்த தன் செல்லப்பிராணி ஒரு அற்புதம் என நெகிழ்கிறார் Grga Brkic.