புறப்பட்ட சில நொடிகளில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்! பயணித்த அனைவரும் பலி
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவரும் பலியானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை வடகிழக்கு ஜார்ஜியாவில் உள்ள Gainesville விமான நிலையத்தில் இருந்து Cessna 182 என்ற ஒற்றை என்ஜின் விமானம் புளோரிடாவுக்கு புறப்பட்டுள்ளது. இதில், 3 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் சுமார்3.2 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேரின் உடலை கண்டுபிடித்துள்ளனர். மூவரும் விமானத்தில் பயணித்தவர்கள் தான் என்பதை விமானப் போக்குவரத்துறை உறுதிசெய்துள்ளது.
எனினும், இறந்தவர்களின் விபரங்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
விமானத்தின் இறக்கை வீடென்றின் மீது விழுந்துள்ளது, இதில் வீட்டிற்கு சேதடைந்துள்ளதாகவும், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரவித்துள்னர்.
அதுமட்டுமின்றி விமானத்திலிருந்து எரிப்பொருள் வீட்டின் மீது கொட்டியதால் அந்த வீட்டிலிருந்து குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
We're on the ground in Gainesville where a single-engine Cessna 182 crashed, killing three people onboard. The plane crashed shortly after takeoff from Lee Gilmer Memorial Airport. Live reports coming up on PeachtreeTV/ @cbs46. pic.twitter.com/MzNwi6Sv7e
— Zac Summers (@ZacOnTV) February 27, 2021
விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.