வெள்ளை மாளிகையில் ஒபாமா... அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை: கமெராவில் சிக்கிய காட்சி
வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா (60) வருகை புரிந்த நிலையில், இந்நாள் ஜனாதிபதியான ஜோ பைடனை கண்டுகொள்ளாமல் வெள்ளை மாளிகை அலுவலர்கள் அனைவரும் ஒபாமாவை சூழ்ந்துகொள்ள, ஜோ பைடன் (79) குழம்பிப்போய் நிற்பதைக் காட்டும் வேடிக்கை வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா.
ஒபாமாவும் பைடனும் ஜோக்கடித்துக்கொண்டும் கைகுலுக்கிக்கொண்டும் இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, வேண்டுமென்றே பைடனை, துணை ஜனாதிபதியாகிய பைடன் அவர்களே என்று அழைத்துவிட்டு, பின்னர் அது ஒரு ஜோக் என்று கூற, அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.
ஆனால், ஒபாமாவின் உரை முடிந்ததும், வெள்ளை மாளிகை அலுவலர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒபாமா அவர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருக்க, ஜோ பைடனை யாருமே கண்டுகொள்ளவேயில்லை.
ஒரு கட்டத்தில், நான்தானே இப்போது அமெரிக்க ஜனாதிபதி என்பதுபோல குழம்பிப்போய் நின்றுகொண்டிருந்த பைடன், பிறகு, இது என்னடா நம்மை யாருமே கண்டுகொள்ளமாட்டேன் என்கிறார்களே என்பது போல கைகளை விரித்தபடி மறுபக்கமாக செல்லத் துவங்கிவிட்டார்.
பிறகு, மீண்டும் ஒபாமா மக்களுடன் பேசிக்கொண்டிருக்க, துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் மற்றவர்களை ஒபாமாவுக்கு அறிமுகம் செய்ய, பின்னால் விழித்துக்கொண்டிருந்த ஜோ பைடன் ஒபாமாவின் தோளில் கை வைத்து அவரை அழைத்து ஏதோ சொல்ல முயற்சிக்க, ஒபாமா அவரைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவிவரும் நிலையில், மக்கள் ஆளாளுக்கு வேடிக்கையாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஒருவர், ’இப்போது புரிகிறதா, யார் உண்மையாக அமெரிக்காவை ஆளுகிறார்கள் என்று, அது ஜோ பைடன் இல்லை’ என்று கூற, மற்றொருவரோ, ’அவர் 80 மில்லியன் வாக்குகள் வாங்கினார், ஆனால், அந்த கூட்டமான அறையில் அவருக்கு ஒரு நண்பர் கூட இல்லை’ என விமர்சித்துள்ளார்.