ஒரு பக்கம் மலைப்பாம்பு... மறுபக்கம் கழுதைப்புலி: நடுவில் சிக்கிக்கொண்ட குட்டி மானுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில், மலைப்பாம்பு ஒன்றிற்கும் கழுதைப்புலி ஒன்றிற்கும் நடுவில் சிக்கிக்கொண்ட மான் ஒன்றின் பரிதாப நிலையைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், இம்பாலா என்று அழைக்கப்படும் மான் குட்டி ஒன்று புல் மேய்ந்துகொண்டிருக்க, அதை ஒரு மலைப்பாம்பு பார்த்துவிடுகிறது.
அது அந்த மான் குட்டியை நோக்கி விரைய, இன்னொரு பக்கம் கழுதைப்புலி ஒன்று அந்த மான் குட்டியைப் பார்த்துவிடுகிறது.
மலைப்பாம்பு அந்த மான் குட்டியை சுற்றி வளைத்துக்கொள்ள, அந்த கழுதைப்புலியும் அந்த மானை நோக்கி வருகிறது. மலைப்பாம்பிடம் சிக்கிக்கொண்ட மான் குட்டியைக் கவர்ந்துகொள்ள அது முயற்சி செய்கிறது.
தான் தனது உணவுக்காக பிடித்த மான் குட்டியை மலைப்பாம்பு கொல்ல, ஆனால், அதனிடமிருந்து மான் குட்டியை கழுதைப்புலி பிடுங்க முயல, ஒரு கட்டத்தில் மலைப்பாம்பு மானை விட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறது.
மலைப்பாம்பு பிடித்த மான் குட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடும் அந்த கழுதைப்புலி, அதன் தோலைக்கூட விடாமல் முழுமையாக அதை தின்று முடிக்க, மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து தன் உணவு பறிபோனதை சோகத்துடன் வேடிக்கை பார்க்கிறது அந்த மலைப்பாம்பு.
இந்த காட்சியை Mike Sutherland (34) என்பவர் படம் பிடித்துள்ளார்.