இளம்பெண்ணின் உடைகளைக் களைந்து சோதனையிட்ட பொலிசார்: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி
பெண் ஒருவரின் காரை சோதனையிட்ட பொலிசார், அவரை கட்டாயப்படுத்தி அவரது உடைகளைக் களையச் செய்துள்ளார்கள்.
அவரது உடைகளைக் களைந்து சோதனையிட்டது, பொலிசாரின் அதிகாரத்தை மீறிய செயல் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிஸ் எல்லைப் பொலிசார், பெண் ஒருவரின் உடைகளைக் களைந்து சோதனையிட்டது, தங்கள் அதிகாரத்தை மீறிய செயல் என நீதிமன்றம் ஒன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு, ஜெனீவா எல்லையில் 36 வயதான பெண் ஒருவரின் காரை சோதனையிட்ட பொலிசார், சந்தேகத்தின் பேரில் அவரை கட்டாயப்படுத்தி, அவரது உடைகளைக் களையச் செய்துள்ளார்கள்.
அந்த பெண், தான் துஷ்பிரயோகிக்கப்பட்டதாக கூறி, தனக்கு 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் நஷ்ட ஈடுவழங்கவேண்டும் என புகாரளிக்க, பெடரல் நிர்வாக நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துவிட்டது.
அதைத் தொடர்ந்து, அவர் சுவிஸ் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார். நேற்று முன் தினம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொலிசார் அந்தப் பெண்ணை சோதனையிட்டது சரியல்ல என்று கூறியுள்ள நீதிபதிகள், அவரது கண்ணியம் மற்றும் உரிமைகள் மீறப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
சோதனையிடும் எல்லை அதிகாரிகள், சோதனையிடப்படும் நபர் ஏதோ ஒரு விடயத்தைத் தன் உடலில் மறைத்துவைத்துள்ளார் என்பதற்கு உறுதியான ஆதாரம் இருந்தாலொழிய, அவரது உடைகளைக் களைந்து அந்தரங்க சோதனை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒருவர் நியாயப்படி சோதனையிடப்படும்போதுகூட, அவசர நிலை தவிர்த்து மற்ற நேரங்களில், பெண்களை சோதனையிடும்போது பெண் அதிகாரிகளும், ஆண்களை சோதனையிடும்போது ஆண் அதிகாரிகளும் மட்டுமே சோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அந்தப் பெண்ணை சோதனையிட்ட பொலிசார், இராணுவ நீதிமன்ற அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.