ஜீன்ஸ் பேண்டை அறிமுகம் செய்ததற்கு பின்னால் இருக்கும் காரணம் தெரியுமா?
ஃபேஷன் உலகில் முன்னணியில் இருக்கும் ஜீன்ஸ் பேண்டை பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
என்ன காரணம்
இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே ஃபேஷன் உலகில் முன்னணியில் இருக்கும் ஜீன்ஸ் பேண்டை அணிகின்றனர். அதனுடைய வலுவான துணி மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையால் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டுள்ளது.
இதன் புகழானது 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஃபேஷன் உலகில் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜீன்ஸ் பேண்ட் முதன் முதலில் உலகத்திற்காக உருவாக்கப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில் முதல் முதலாக ஜீன்ஸ் தோன்றியது. அந்த காலகட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில்களில் தொழிலாளர்களுக்கு வலுவான மற்றும் நீடித்த ஆடையாக ஜீன்ஸ் பயன்படுத்தப்பட்டது.
இது முதன்முதலாக இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. மேலும், ஜின் என்ற வார்த்தையானது ஜெனோவாவில் இருந்து வந்தது. இதையடுத்து, பிரான்சில் நிம்ஸ் பகுதியில் உள்ள சில நெசவாளர்கள் இந்த துணியை தயாரித்தனர்.
அங்கு, இந்த துணியானது டி நிம்ஸ் (de nimes) என்று அழைக்கப்பட்டு படிப்படியாக டெனிம் என மாறியது.
பின்னர், 19ஆம் நூற்றாண்டில், டேவிஸ் என்ற லாட்வியன் இந்த ஜீன்ஸை தயாரித்தார். அப்போது அவர் அமெரிக்காவின் நெவாடாவில் விற்பனையாளராக பணிபுரிந்தார்.
அந்த நேரத்தில் அங்குள்ள சுரங்க தொழிலாளர்களுக்கு ஜீன்ஸை தயாரித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டினார்.
பின்னர், ஜீன்ஸ் பிரபலமாகி தொழிலாளர்களின் ஆடைகளில் இருந்து சாமானியர்களின் ஆடையாக மாறியது.
ஒரு சுரங்கத் தொழிலாளியின் மனைவி நெசவாளர் ஒருவரிடம் தன் கணவரின் கால்சட்டை பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிவதாக கூறினார். அப்போது, அந்த நெசவாளி அதனை சரி செய்ய வேண்டும் என்று உலோக பட்டன்கள் போன்ற ரிவெட்டுகள் பயன்படுத்த தொடங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |