மைதானத்தில் கண்கலங்கியது ஏன்? இந்திய வீரர் சிராஜ் உருக்கமுடன் சொன்ன காரணம்
இந்திய அணி வீரரான சீராஜ் தேசிய கீதம் ஒலித்த போது கண்கலங்கியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் தேசியகீதம் ஒலிக்கையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் தன்னை மீறி கண் கலங்கி அழுதார்.
Mohammed Siraj on why he got so emotional while the National Anthem was being played at the SCG.#TeamIndia #AUSvIND pic.twitter.com/zo0Wc8h14A
— BCCI (@BCCI) January 7, 2021
✊ #AUSvIND pic.twitter.com/4NK95mVYLN
— cricket.com.au (@cricketcomau) January 6, 2021
இதுதொடர்பான வீடியோ உடனடியாக இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.’
இந்நிலையில் தேசியகீதம் ஒலிக்கும் போது தான் அழுததற்கான காரணம் குறித்து அவர் போட்டி முடிந்த பின் கூறினார்.
அதில், தேசியகீதம் ஒலிக்கையில் தன் தந்தையின் நினைவு வந்து விட்டதால் உணர்ச்சியின் வெளிப்பாடாக அழுது விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா தொடருக்கான அணியில் தேர்வான போது அவரது தந்தை ஹைதராபாதில் காலம் அடைந்தார். தந்தையின் இறப்புக்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் அப்படி விளையாடி கிடைக்கும் வெற்றியை அவருக்கு அஞ்சலியாக செலுத்த வேண்டும் என்ற தொடருக்கு முன்னர் சபதம் ஏற்றுக் கொண்டார்.
அந்த வகையில் அவர் பங்கேற்ற இரண்டாவது போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றியை தேடித்தந்தார். இன்றைய போட்டியிலும் அபாயகரமான வீரரான வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அவர் அசத்தியது குறிப்பிடத்தக்கது.