உங்களுடைய உதடு கருமையாவதற்கு காரணம் இது தான் - கட்டாயம் அறியவும்
பொதுவாகவே ஒருவருடைய முகத்திற்கு அழகை தருவது அவருடைய சிரிப்பாக தான் இருக்கும். அந்த சிரிப்பிற்கு ஆதாரமாக இருப்பது உதடு.
ஆரோக்கியமான இளஞ்சிவப்பு உதடுகள் ஒருவரின் முகத்தின் கவர்ச்சியான அம்சமாகும்.
இளஞ்சிவப்பு நிற உதடுகள் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் முகத்திற்கும் அழகை சேர்க்கின்றன. ஆனால் வயது முதிர்வு, சூரிய பாதிப்பு போன்ற பல காரணிகளால் காலப்போக்கில் உதட்டின் நிறம் மாறிவிடும்.
உங்கள் உதடுகளை மீண்டும் இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால், உதடுகளில் கருமை ஏற்பட என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அது எப்படி உங்களுடைய உதடு கருமையானதாக மாறுகின்றது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உதடு கருமையாவதற்கான காரணம் என்ன?
தூசி மாசுபடுவதால் முகம் முழுவதும் இறந்த செல்கள் ஏற்படும். இதனால் உதட்டில் கருமை ஏற்படலாம்.
முகத்தை கழுவுவதை போன்று உதடுகளையும் தேய்த்து கழுவ வேண்டும்.
கோடை காலத்தில் அதிகளவிலான தண்ணீர் அருந்தாமல் இருப்பதாலும் உதடு கருப்பாக மாறலாம்.
தண்ணீர் பற்றாக்குறையால் உதடு வெடிக்கும். எனவே தினமும் போதுமானளவு தண்ணீர் அருந்தவும்.
இரவு தூங்கும் முன் ஷியா பட்டர் மற்றும் கோகோ பட்டர் ஆகியவற்றை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
தற்போது பெண்களும் புகைப்பிடிக்கிறார்கள். இதனால் உதடு கருப்பாக மாறும். உதட்டை எப்போதும் மென்மையாக வைத்திருக்க வேண்டும். எனவே புகைப்பிடித்தலை தவிர்க்கவும்.
பகலில் காபி மற்றும் டீ குடிப்பதும் உதடு கருமையாவதற்கு முக்கிய காரணமாகும். டீ குடிப்பதால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதிக டீ, காபி குடிப்பதும் உதடுகளை கருமையாகும்.
உங்கள் உணவில் வைட்டமின் சி அதிகமாக எடுத்துக்கொண்டால் நல்லது. அதாவது ழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |