உலகில் பணக்கார மகாராணி! பிரம்மாண்டமான சொத்து மதிப்பு
உலகின் மிகப்பெரிய பணக்காரிகளில் ஒருவர் சீனாவின் பேரரசி வூ பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பணக்கார பெண்மணி
பொதுவாக நாம் பணக்காரர்கள் என்றால் மிகப்பெரிய நிறுவனங்கள் வைத்திருப்பவர்களையும், கார், பங்களா, அதிக ஆபரணங்கள் வைத்திருப்பவர்களையும், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்களையும் தான் சொல்வோம்.
மேலும், உலகிலேயே பெரிய பணக்காரர் என்றால் எலான்மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவின்பணக்காரர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் பெயர் தான் நம் நினைவுக்கு வரும்.
இவர்களின் சொத்து மதிப்பை விட அதிகமான சொத்து வைத்திருந்தவர் தான் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். அவர் தான் சீன பேரரசி வூ.
சொத்து மதிப்பு
மிக பெரிய பணக்காரர்களான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர்கள், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர்கள், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 91 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால், இவர்களை ஒப்பிடுகையில் சீன பேரரசி வூவின் சொத்து மதிப்பு 16 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
Money.com படி, பேரரசி வூ டாங் வம்சத்தை சேர்ந்தவர் என்றும், வரலாற்றிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வரலாற்றாசிரியர்களின்படி சீன பேரரசி வூ மிகவும் தந்திரமான மற்றும் இரக்கமற்ற பெண்மணி என்று கூறப்படுகிறது.
தன்னுடைய அதிகாரத்திற்காக சொந்த குழந்தைகளை கூட கொன்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர் உயர் கல்வி கற்றுள்ளார். மேலும், இவரது புதிரான வாழ்க்கை கதை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சித்தரித்து வந்துள்ளது.
அதாவது, ஃபேன் பிங்பிங் நடித்த எம்ப்ரஸ் ஆஃப் சைனா என்ற தொலைக்காட்சி தொடர் இவரை பற்றி தொடர்புடையது தான்.
இவரது ஆட்சியில் சீன பொருளாதாரம் உயர்வு
சீன பேரரசி வூ, 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளார். இவரின் ஆட்சியில், மத்திய ஆசியாவில் சீன சாம்ராஜ்யம் விரிவடைந்தது.
மேலும், இவரது ஆட்சியில் சீனாவில் பொருளாதாரத்தில் தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்துடன் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்தது என்று தி சைனா ப்ராஜெக்ட் கூறியுள்ளது.
சீன மகாராணி வூ, தனது வாழ்நாளில் மட்டுமல்லாமல் இறந்த பின்னரும் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |