கூகுளின் இலவச உணவு திட்டம்: CEO சுந்தர் பிச்சையின் மிகப்பெரிய வணிக உத்தி!
கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான புதிய யோசனைகள் கிடைக்கும் என சிஇஓ சுந்தர் பிச்சை சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கூகுள் உணவகம்
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள், தனது ஊழியர்களுக்கு வழங்கும் இலவச உணவு குறித்து ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளது.
கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இது வெறும் உணவு அல்ல, ஊழியர்களின் படைப்பாற்றலை தூண்டும் ஒரு சிறந்த கருவி என்று கூறியுள்ளார்.]
உணவு மேசையில் பிறக்கும் புதிய யோசனைகள்
இது தொடர்பாக சுந்தர் பிச்சை கூறுகையில், "உணவகத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து உணவு உண்ணும் போது, பல்வேறு துறைகளில் பணியாற்றும் நபர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த உரையாடல்களில் இருந்துதான் பல புதிய யோசனைகள் பிறக்கின்றன. இது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய யோசனைகளால் நிறுவனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் இலவச உணவு வழங்கும் செலவை சொற்பமாக மாற்றி விடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Google ஊழியர்களின் நலன் திட்டங்கள்
இலவச உணவு மட்டுமல்லாமல், கூகுள் தனது ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.
சம்பளத்துடன் கூடிய விடுப்பு, வீட்டில் இருந்து பணிபுரியும் வசதி, சிறந்த சுகாதார காப்பீடு போன்றவை இதில் அடங்கும். இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பணியில் முழுமையாக ஈடுபடவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |