பிக்பாஸ் விக்ரமன் மீதான பாலியல் புகார்! விசாரணைக்கு திட்டம்
பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் பாலியல் மற்றும் பண மோசடி அளித்ததாகக் பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது புகார் அளித்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பொலிசார் விசாரணைக்கு திட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் காதலித்து என்னை ஏமாற்றியதாக கிருபா முனுசாமி என்ற பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர், "பிக்பாஸ் முடிந்தும் நாங்கள் காதலில் தான் இருந்தோம். அப்போது அவர், என்னை துன்புறுத்தி பயன்படுத்தி கொண்டார். லட்சக்கணக்கில் என்னிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், சாதியை வைத்தும் இழிவாக பேசியுள்ளர்" என கூறியுள்ளார்.
மேலும், அவர் என்னை காதலிப்பதாக கூறி வேறொரு பெண்ணுடன் பழகி வருகிறார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொலிசார் தலையிட்டு விக்ரமன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தற்போது, விக்ரமன் மீதுள்ள குற்றச்சாட்டு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அவரிடம் விசாரணை செய்ய பொலிசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், பெண் வழக்கறிஞர் கிருபாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்
சில தினங்களுக்கு முன்பு, பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி சுமத்திய குற்றச்சாட்டுக்கு விக்ரமன் மறுத்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில்,"கிருபா முனுசாமி என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலவே இந்தக் கதைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. என் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் முற்றிலும் மறுக்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுதலிக்கவும், அவை ஒவ்வொன்றையும் சட்டத்தின் கீழ் அறியப்பட்ட முறையில் நிராகரிக்கவும் நான் முழுமையாக தயாராக இருக்கிறேன். அறம் வெல்லும்" எனக் கூறியிருந்தார்.
I deny the allegations made against me by Ms. Kiruba Munusamy in entirety. A coin has two sides likewise this story also has two sides. "There is only one victim in this issue and it is me rather than the person making the accusations against me".
— Vikraman R (@RVikraman) July 17, 2023
We were acquaintances till… pic.twitter.com/IGCFE0PrBl
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |