மிகவும் Slim-ஆன போன்... நாளை அறிமுகம் செய்யும் Mi: விலை தான் கொஞ்சம் அதிகமா இருக்கு
தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட் போன் விற்பனை என்பது கடும் போட்டியாகிவிட்டது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் வருகை பெருகிவிட்டது.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதத்திற்கு பல பிராண்ட்கள் தங்களுடைய புதிய போன்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு POCO M3 Pro 5G என்ற போனை ஆரம்ப விலையாக 15,999-ஆக அறிமுகப்படுத்தியது.
இது இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால் இதைத் தொடர்ந்து கடந்த 16-ஆம் திகதி OnePlus Nord CE 5G மொடலை அறிமுகம் செய்தது. விலையும் நடுத்தர மக்கள் வாங்கும் அளவிற்கு ஆரம்ப விலையாக 22,999 ரூபாயை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், தற்போது நாங்க எதுக்கு இருக்கிறோம், இது ஒரு புது ஸ்மார்ட் போனை இறக்குறோம் பாரு என்று mi (Xiaomi Mi 11 Lite 5G ) என்ற போனை நாளை அறிமுகம் செய்கிறது.
The Slimmest & Lightest smartphone of 2021 is here!#Mi11Lite Launching 22nd June at 12 Noon.
— Mi India (@XiaomiIndia) June 19, 2021
2021-ஆம் ஆண்டின் மிகவும் Slim-ஆன போன் என்று கூறும் அந்நிறுவனம் இதை வரும் 22-ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
இதில் இருக்கும் சிறப்பம்சங்கள்
- Processor Qualcomm Snapdragon 780G
- Display 6.55 inches (16.64 cms)
- Storage 128 GB
- Front Camera Single (20 MP, f/2.2, Wide Angle Camera(27 mm focal length, 3" sensor size, 0.8 m pixel size)) Rear Camera Triple (64 MP, f/1.79, Wide Angle Camera + 8 MP, f/2.2, Wide Angle, Ultra-Wide Angle Camera(4.0" sensor size, 1.12µm pixel size) + 5 MP, f/2.4 Camera)
- Battery 4250 mAh RAM 6 GB
- Display Type AMOLED, HDR 10+
விலை விவரங்கள்
ள்(Xiaomi Mi 11 Lite 5G) நாளை தான் இது அறிமுகம் செய்யப்படவுள்ளதால், இதன் 6 GB RAM மற்றும் 128 GB Storage கொண்ட போன் விலையின் தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.
இதன் விலை 31690-ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே சிறப்பம்சங்களுடன் பல போன்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், விலை விஷயத்தில் மட்டும் Mi கொஞ்சம் குறைத்தால்,
இதுவும் இளைஞர்களுக்கு பிடித்த போனாக மாறிவிடும்.
கிடைக்கும் வண்ணங்கள்
- மஞ்சள்
- கருப்பு
- மிண்ட் பச்சை