ரத்த சோகையை நீக்கும் கருவேப்பிலை பொடி இட்லி! செய்வது எப்படி?
பெரும்பாலும் சமையலில் தாளிப்பிற்காக பயன்படும் கருவேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது.
இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் நிறைந்த கருவேப்பிலை ரத்த சோகைக்கு தீர்வாகிறது, குறிப்பாக சர்க்கரை அளவில் கட்டுக்குள் வைப்பதுடன் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது.
தலைமுடி மற்றும் சருமம் பொலிவாக இருக்க உதவுவதுடன், ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இதனை கொண்டு சூப்பரான பொடி இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மினி இட்லி - 20
நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
அரைக்க
கறிவேப்பிலை - 2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டேபிள்ஸ்பூன்
செய்முறை
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும், இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.