பாகிஸ்தான் கொடியுடன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த லொறிகளுக்கு நேர்ந்த கதி.. தலிபான் வெறிச்செயல்! வைரலாகும் வீடியோ
பாகிஸ்தானிலிருந்து உணவு உட்பட நிவராண உதவி பொருள்களோடு ஆப்கானிஸ்தானுக்கு நுழைந்த லொறிகளை வழிமறித்த தலிபான்கள், வாகனங்களிலிருந்த பாகிஸ்தான் கொடியை உடைத்து அகற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் திகதி முதல் ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்த தலிபான், அதிரடியாக சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு நிவராண உதவி பொருட்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து உணவு உட்பட நிவராண உதவி பொருள்களோடு ஆப்கானிஸ்தானுக்கு நுழைந்த லொறிகள் டோர்காம் வாயிலைக் கடக்கும்போது, வாயிலில் இருந்த தலிபான்கள் பாகிஸ்தானின் கொடியை வாகனத்திலிருந்து உடைத்து அகற்றியுள்ளனர்.
பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் கொடியுடன் வாகனங்கள் தங்கள் நட்டிற்குள் நுழைய தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The truck was loaded with food on a Pakistani-aided vehicle with a Pakistani flag, and when it crossed the Torkham gate, the Taliban at the gate snatched the Pakistani flag from the vehicle. pic.twitter.com/fL8LGLPCcE
— Ihtesham Afghan (@IhteshamAfghan) September 21, 2021
டோர்காம் வாயிலைக் கடக்கும்போது வாகனங்களிலிருந்த பாகிஸ்தா்ன கொடியை தலிபான் போராளிகள் உடைத்து அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.