கூடைப்பந்து போட்டியின்போது பார்வையாளர்கள் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த இளம்பெண்: ஒரு சுவாரஸ்ய காட்சி
அமெரிக்காவில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி ஒன்றின்போது செய்த அசாதாரண உதவியால், பார்வையாளர்கள் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம்பெண் ஒருவர்.
விளையாட்டுப் போட்டியின்போது, பந்து மிக உயரமாக சென்று, கூடை பொருத்தப்பட்டுள்ள போர்டுக்குப் பின்னால் சென்று சிக்கிக்கொண்டது.
விளையாட்டு அலுவலர் ஒருவர் ஒரு நாற்காலி மீது ஏறி, ஒரு குச்சியின் உதவியால் அதை எடுக்க முயல அவரால் முடியவில்லை. பிறகு உயரமான விளையாட்டு வீரர்கள் பலர் முயன்றும் அவர்களாலும் முடியவில்லை.
This Indiana cheerleader is a legend for this ? pic.twitter.com/qP3X5ZHBex
— Bleacher Report (@BleacherReport) March 18, 2022
அப்போது கமெண்ட்ரி கொடுத்துக்கொண்டிருந்தவர், நமது சியர் லீடர்கள்தான் உயரமாக குதிப்பார்களே, அவர்களை வைத்து முயற்சி செய்யலாமே என்று கூறிக்கொண்டிருக்க, அதற்குள் உண்மையாகவே சியல் லீடரான Cassidy Cernyயும், அவரது குழுவிலுள்ள Nathan Parisம் பந்தை எடுக்க முன்வந்தார்கள்.
Nathan, Cassidyயை லாவகமாக தூக்கி வீசி, தன் கைகளால் அவரது பாதங்களைத் தாங்கிக்கொள்ள, அழகாக அந்த பந்தை எடுத்துவிட்டார் Cassidy.
மக்கள் கூட்டம் ஆரவாரிக்க, கமெராக்கள் எல்லாம் விளையாட்டு வீரர்களை விட்டுவிட்டு Cassidyயை சூழ்ந்து கொள்ள, Cassidyக்கு சந்தோஷமும் வெட்கமும் தாங்கவில்லை!