100 அடி உயர பாலத்திலிருந்து சரிந்த ட்ரக்... பின்னர் நடந்த அற்புதம்
அமெரிக்காவில் மலைகள் அதிகம் உள்ள ஒரு பகுதி Idaho ஆகும். அப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த ஒரு ட்ரக், கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த ட்ரக்கின் பின்னால் இருந்த சங்கிலிகள் பாலத்தில் சிக்கிக்கொள்ள, 100 அடி உயரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது அந்த டரக். சுமார் 10 மாடிக்கட்டிடம் ஒன்றிலிருந்து தொங்கிக்கொண்டிருப்பதுபோல் தொங்கிக்கொண்டிருந்த அந்த ட்ரக்குக்குள், ட்ரக்கை செலுத்திக்கொண்டிருந்த 67 வயது ஆண் ஒருவரும், அவருடன் பயணித்த 64 வயது பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.
ட்ரக் ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட பொலிசார் ஒருவர், மற்றொரு சங்கிலியை எடுத்து, கார் விழாதபடி அதை பாலத்திலுள்ள கம்பிகளுடன் பிணைத்துவிட்டு, பொலிசாரையும் தீயணைப்பு வீரர்களையும் அழைத்துள்ளார்.
அவர்கள் வந்து, ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ட்ரக்கிலிருந்த அந்த ஆணையும், பெண்ணையும், கூடவே இரண்டு குட்டி நாய்களையும் மீட்டுள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், முதலில் அந்த கார் 100 அடி உயரத்திலிருந்து பள்ளத்தில் விழவேண்டியது, அது விழவும் இல்லை, அந்த ட்ரக்கிலிருந்த மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதுதான்.


