மாங்கா பறித்ததற்காக குழந்தைகளை கட்டி வைத்து அடித்து மாட்டு சாணி சாப்பிட வைத்த கொடூரன்கள்! கலங்க வைக்கும் காட்சி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மாங்கா பறித்ததற்காக சிறுவர்களை கட்டி வைத்து அடித்து மாட்டு சானம் சாப்பிட வைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தின் தோர்ரூரில் இக்கொடூரம் நடந்துள்ளது. சிறுவர்களை கொடுமைப்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்த குற்றவாளிகள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குறித்த வீடியோவை கண்ட உள்ளூர் பொலிசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான பனோத் யாகுப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
9 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் தங்கள் நாயை தேடி மாங்கா தோட்டத்திற்குள் சென்றுள்ளனர்.
அப்போது தோட்டத்திலிருந்து மாங்கா பறித்துள்ளனர். இதைக்கண்ட பனோத் யாகுப், பனோத் ராமுலு இருவரையும் விரட்டிச் சென்று பிடித்து, கட்டி வைத்து மாட்டு சாணத்தை வாயில் திணத்து சாப்பிட வைத்துள்ளனர்.
பின் கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர், வலி தாங்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுவதை ஒருவர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.