தாய்நாட்டுக்கு துரோகம் செய்த உக்ரைன் பொலிசாருக்கு நேர்ந்த கதி...
தன் தாய்நாட்டுக்கு துரோகம் செய்து ரஷ்யா பக்கம் சாய்ந்த உக்ரைன் பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவைதைத் தொடர்ந்து, தெற்கு உக்ரைனிலுள்ள Nova Kakhovka என்ற இடத்தில் பணியாற்றி வந்த பொலிசாரான Serhiy Tomka என்பவர், ரஷ்யர்களுக்கு ஆதரவாக செயல்படத் துவங்கியுள்ளார்.
ரஷ்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது, ரஷ்யர்களுடன் தகவல்கள் பகிர்ந்துகொள்வது என இருந்த Tomka, இனி தனக்கு பிரகாசமான எதிர்காலம்தான் என நம்பியிருந்தபோது, திடீரென அவரது வாழ்வு முடிவுக்கு வந்தது.
ஆம், அவர் தனது காரில் பயணிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் இராணுவத்தின் சிறப்பு ஆபரேஷன் படைப்பிரிவு இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
Police officer who joined Russian administration in the Kherson region of occupied southern Ukraine and promoted to Deputy Head of Police was assassinated. He was killed in Nova Kakhovka in his car- Ukrainian SOF’s National Resistance Centre reports https://t.co/EiDxqq0N5U pic.twitter.com/cqi4r3zqYt
— ELINT News (@ELINTNews) July 9, 2022