சாம்ராஜ்ஜியமாக உருவான ZOHO -வின் சாதனை .. ஸ்ரீதர் வேம்பு பேசிய வீடியோ வைரல்
ZOHO நிறுவனத்தை உருவாக்கிய ஸ்ரீதர் வேம்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
ZOHO நிறுவனம்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ZOHO நிறுவனம் SAAS சாம்பாஜ்ஜியமாக விளங்குகிறது.
இதனை 1996 ஆம் ஆண்டு சிறிய ப்ரொடக்ட் நிறுவனமாக ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினர்.தற்போது, பெரிய வர்த்தகமாக உருவெடுத்து சாம்ராஜ்ஜியமாக நிற்கிறது.
இந்நிறுவனம் பல கோடி சிறிய வர்த்தக நிறுவனத்தின் நிர்வாக மேம்பாட்டிற்கு உதவி செய்தது. மேலும், ZOHO -வில் மலிவான சேவை இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் நிர்வாக பணிகளுக்காக பல மில்லியன் டொலர்களை சேமிக்கவும் உதவுகிறது.
ZOHO வெளியிட்ட வீடியோ
ZOHO நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டியுள்ளதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த பதிவில் உங்களது வணிகத்திற்கு எங்களை நம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 100 மில்லியன் பயணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.
ZOHO நிறுவனமானது தனது வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக வெளியில் இருந்து நிதியை திரட்டாமல் தனது லாபத்தில் இருந்து மட்டுமே எடுத்து விரிவாக்கம் செய்தது.
இந்தியாவில் இருந்து SAAS நிறுவனம் உலக நாடுகளில் வர்த்தகம் செய்வது தற்போதைய காலத்தில் கடினமான ஒன்று. ஆனால், ZOHO-வின் வெற்றியானது மற்ற நிறுவனங்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது.
? 100 million users and counting! ✨
— Zoho (@Zoho) September 5, 2023
We're thrilled to have so many of you trust us with your business. Our shared stories, connections, and the impact we have made together are truly fulfilling.
Thank you for being part of our #100MillionStrong journey! ? pic.twitter.com/nT0qiGAbEJ
ZOHO பயணம்
- 1996 ஆம் ஆண்டு அட்வென்ட்நெட் இன்க் (adventnet inc) ஆக துவங்கப்பட்டது.
- 2008 ஆம் ஆண்டு 1 மில்லியன் யூசர்களை கடந்தது.
- 2009 ஆம் ஆண்டு அட்வென்ட்நெட் ஜோஹோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 2015 ஆம் ஆண்டு 15 மில்லியன் யூசர்களை கடந்தது.
- 2016 ஆம் ஆண்டு 20 மில்லியன் யூசர்களை கடந்தது.
- 2018 ஆம் ஆண்டு 30 மில்லியன் யூசர்களை கடந்தது.
- 2019 ஆம் ஆண்டு 50 மில்லியன் யூசர்களை கடந்தது.
- 2020 ஆம் ஆண்டு 60 மில்லியன் யூசர்களை கடந்தது.
- 2023 ஆம் ஆண்டு நேற்று 100 மில்லியன் யூசர்களை கடந்தது.