அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதறவிட்ட விஹாரி-அஸ்வின் ஜோடி! சிட்னி டெஸ்டை டிரா செய்தது இந்தியா

Cricket Aus vs Ind Test 3
By Balakumar Jan 11, 2021 02:47 PM GMT
Report

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இதனை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட ஜனவரி 7-ஆம் திகதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது.

முதல் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னங்ஸில் 338 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலியா அணி, 4வது நாள் வரை தொடர்ந்து விளையாடி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து. இந்திய அணி வெற்றிக்கு 407 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ரோகித் சர்மா (52), ஷுப்மன் கில் (31) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

புஜாரா (9), ரஹானே (4) ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்னும் 309 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5வது களமிறங்கிய இந்திய அணி, 5வது நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்ள் எடுத்தது போட்டியை டிரா செய்தது.

ரோகித் சர்மா (52), ஷுப்மன் கில் (31), புஜாரா (77), ரஹானே (4), ரிஷப் பண்ட் (97) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

விஹாரி-அஸ்வின் ஜோடி கடைசி வரை அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதறவிட்டது.

விஹாரி 161 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 23 ஓட்டஙகள் அடித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 128 பந்துகளில் 7 பவுண்டரி அடித்து 39 ஓட்டங்கள் எடுத்தார்.

3வது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற வெற்றி கண்ககில் சமநிலையில் இருக்கிறது.

இரு அணிக்களுக்கும் இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15ம் திகதி தொடங்குகிறது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US