டிரம்ப்பின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய வம்சாவளி பெண்! பலருக்கும் தெரியாத தகவல்: குவியும் பாராட்டு
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டதன் பின்னணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இருப்பதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால், தோல்வியை ஏற்காமல் தேர்தல் குறித்தும், ஜோ பைடன் வெற்றி குறித்தும் பல்வேறு கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வந்தார்.
தேர்தலுக்கு முன்பும், டிரம்ப்பின் டுவிட்டர் பதிவுகள் பல ஏகப்பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் டிரம்பின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக மூடக்கபப்ட்டு, அதன் பின் கொடுக்கப்பட்டு வந்தது.
ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவிருந்த நிலையில், டிரம்பின் ஆதரவாளர்களால் மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்தது. அப்போது கூட டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார் இது வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரின் டுவிட்டர் அக்கவுண்ட் டிரந்தரமாக முடக்கப்பட்டது.
ஒரு வல்லரசு நாட்டின் அதிபர் கணக்கை தைரியமாக டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கியுள்ளதால், அதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் விஜயா கட்டே என்பவர் தான், இவர் டுவிட்டர் நிறுவனத்தின் சட்டம் மற்றும் கொள்கைவகுக்கும் பிரிவின் தலைவராக உள்ள விஜயா காட்டே(45) இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வன்முறை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக டிரம்ப்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என்று காரணம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்த விஜயா கட்டே, சிறுவயதிலே அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். இவரது அப்பா கெமிக்கல் இன்ஜினியராக, கல்ப் ஆப் மெக்ஸிகோ நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.
இதன் காரணமாகவே விஜயா தன்னுடைய படிப்பை நியூ ஜெர்ஸியில் முடித்த இவர், நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழக சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்... பிறகு ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், இறுதியில், 2011-ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார்.
வழக்கறிஞரான, இவர் சிறப்பான கொள்கையை வகுத்து டுவிட்டர் நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட வழிவகுத்துள்ளார். கடந்த வருடம், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி, அதிபர் டிரம்பை அவரது ஓவல் அலுவலகத்தில் சந்தித்த போது, விஜயாவும் அப்போது அவர்களுடன் இருந்தார்.
அதேபோல, 2018-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும் இவர் இருந்துள்ளார். இதனால் மொத்தத்தில் சமூகவலைத்தளத்தில் மிகவும் வலிமை மிக்க பெண்மணி என அமெரிக்காவின் உள்ளூர் ஊடகங்கள் இவரை பாராட்டி வருகின்றன.

