இந்திய உணவை மோசமாக விமர்சித்த பெண்; வரலாற்றுப் பின்னணியுடன் சரமாரி பதிலடி கொடுத்த இணையவாசிகள்
இந்திய உணவுகள் சிலவற்றின் புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்த ஒருவர், இந்திய உணவுகள்தான் உலகத்திலேயே சிறந்தவை என குறிப்பிட்டிருந்தார்.
Indian food is the best on earth. Fight me. pic.twitter.com/Q4cw2Dgg5g
— Jeff (@_FlipMan) September 15, 2024
அந்த இடுகையின் கீழ், அவுஸ்திரேலிய பெண்ணொருவர், இல்லவே இல்லை, இந்திய உணவுகளில் அசுத்தமான மசாலாக்களை சேர்ப்பதால்தான் அவை சாப்பிடத்தக்கவையாகவே மாறுகின்றன என்று விமர்சித்திருந்தார்.
அசுத்தமான மசாலாக்கள்
It really, really isn't. https://t.co/jzoiUW60bl
— Dr. Sydney Watson (@SydneyLWatson) September 16, 2024
அசுத்தமான மசாலாக்களை சேர்ப்பதால்தான் ஒரு உணவு சாப்பிடத்தக்கதாகவே ஆகிறது என்றால், இந்திய உணவுகள் நல்ல உணவுகள் அல்ல என்று கூறியிருந்தார் Dr Sydney Watson என்னும் பெண்.
அவரது கருத்துக்களைக் கேட்டு பலர் கொந்தளித்துள்ளார்கள். Derek என்பவர், வரலாற்றுப் பின்னணியுடன் Dr Sydneyக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவிலுள்ள மசாலா வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக, ஐரோப்பிய நாடுகள் போருக்குச் செல்வது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
Does she know that British literally colonized the world in search of those “dirt spices”
— Brandon (@0x_brandon) September 17, 2024
LOL uneducated shitters.
Nita Shah என்பவர், நீங்கள் அசுத்தமான மசாலாக்கள் என அழைக்கும் மசாலாக்கள், உலக நாடுகள் பலவற்றின் சமையல் வகைகளை, மக்கள் விரும்பும் உணவாக மாற்றியுள்ளன.
அப்படியிருக்கும்போது இந்திய மசாலாக்களை நீங்கள் அசுத்தமான மசாலாக்கள் என கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் பல இந்திய கறி வகைகளை எவ்வளவு விரும்புகிறது என்பதிலிருந்தே இந்திய உணவின் சிறப்பு குறித்து அறிந்துகொள்ள முடியும், அதை தனியாக சொல்லிக்காட்ட வேண்டியதில்லை என்கிறார் மற்றொருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |