திடீரென குறுக்கே வந்த கார்... கோபத்தில் மோசமான சைகை காட்டிய பெண்: மகனுடைய மரணத்தில் முடிந்த சம்பவம்
அமெரிக்காவில் சாலையில் பயணிக்கும்போது திடீரென குறுக்கே வந்த காரின் சாரதியைப் பார்த்து, கோபத்தில் ஆபாச சைகை காட்டினார் ஒரு பெண். ஆனால், அதனால் தன் மகனுடைய உயிர் போகும் என அவர் சற்றும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக தெற்கு கலிபோர்னியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் அந்த பெண்.
அப்போது, மற்றொரு கார் சட்டென அவரது காருக்கு குறுக்காகக் செல்ல, கோபமடைந்த அந்த பெண், தனது காரின் குறுக்கே வந்த காரின் சாரதியைப் பார்த்து கோபத்தில் மோசமான சைகை காட்டியிருக்கிறார்.
உடனே அந்த காரிலிருந்த ஒருவர் சட்டென தனது துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணின் காரை நோக்கி சுட்டிருக்கிறார்.
A family is asking for the public’s help in identifying the suspects who shot and killed 6-year-old Aiden. The little boy was with his mother, driving to school on the 55 freeway in Orange, when they were shot at during an apparent road rage incident. https://t.co/Sr1hYV5n88 pic.twitter.com/fVvfNkfZl6
— FOX 11 Los Angeles (@FOXLA) May 22, 2021
காரின் பின் இருக்கையில் அந்த பெண்ணின் மகன் அமர்ந்திருக்க, காரைத் துளைத்துக்கொண்டு பாய்ந்த குண்டு அந்த சிறுவனின் மீது பாய்ந்திருக்கிறது. என்ன நடந்தது என்று புரியாத Aiden Leos என்னும் அந்த 6 வயது சிறுவன், அம்மா, என் வயிறு வலிக்கிறது என்று கதறியிருக்கிறான்.
உடனே காரை ஓரங்கட்டிய அந்த பெண், பதறிப்போய், இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனைத் தூக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்கி சாலையோரமாக பரிதவித்து நிற்க, அவ்வழியே வந்த பொலிசார் ஒருவர் அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார்.
அப்போதுதான் என் தாய் என் தம்பியை கடைசியாக பார்த்தார் என்கிறார் Aidenஇன் அக்காவான Alexis Cloonan. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Aiden, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனான்.
என் தம்பியைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என அந்த சிறுமி கதறும் காட்சி நெஞ்சைப் பிழிய வைப்பதாக அமைந்துள்ளது. Aidenஐ சுட்ட நபர் பயணித்த காரை ஒரு பெண் செலுத்தியுள்ளார். அந்த இருவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.