மற்றொரு ஆணுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய பெண்! முன்னாள் கணவரின் குடும்பத்தினர் செய்த வெறிச்செயல்: உருக வைக்கும் காட்சி
இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெண் ஒருவர் முன்னாள் கணவரின் குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள சாகாய் மற்றும் பான்ஸ் கெடி கிராமங்களுக்கு இடையே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பழங்குடி பெண் பொலிசில் அளித்த புகாரில், அவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர ஒப்புதலால் பிரிந்துவிட்டதாகவும், தற்போது மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் வீட்டிற்கு வந்து தன்னை கடத்திச்சென்று, உறவினர் ஆண் ஒருவரை தனது தோள்பட்டை மீது ஏற்றி அமர வைத்து சுமார் 3 கி.மீ நடக்கவைத்து அடித்து துன்புறுத்தி அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் தோள்பட்டையில் ஆண் ஒருவரை சுமந்து நடந்து செல்ல, பின்னால் ஒரு கும்பால் கட்டை மற்றும் பேட் உடன் அவரை விரட்டிச்செல்கின்றனர்.
A married woman in "Guna" was beaten up ,shamed and forced to carry her reletives on her shoulders as punishment. #IamAgainstModiGovt pic.twitter.com/fM9IvK3Y86
— Poonam Pandit (@PoonamPanditt) February 15, 2021
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மற்றும் குற்றவாளிகள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.