உலகில் வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்கள் எது தெரியுமா? வெளியான டாப் 10 பட்டியல்
உலகில் வாழ்வதற்கு செலவு குறைந்த நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
அதன் படி இந்த அமைப்பு, தற்போது உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சிரியாவில் உள்ள Damascus நகரம் உலகிலேயே செலவு மிகவும் குறைவாக உள்ள நகரமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த படியாக லிபியாவில் உள்ள Tripoli-யும், மூன்றாவது இடத்தை உஸ்பெகிஸ்தானில் உள்ள Tashkent மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த டாப் 10 நகரங்களின் பட்டியல்
1. Damascus (Syria)
2. Tripoli (Libya)
3. Tashkent (Uzbekistan)
4. Tunis (Tunisia)
5. Almaty (Kazakhstan)
6. Karachi (Pakistan)
7. Ahmedabad (India)
8. Algiers (Algeria)
9. Buenos Aires (Argentina)
10. Lusaka (Zambia)