நாடாளுமன்றத்தில் நடக்கும் மோசமான குற்றங்கள்! வெளியான வீடியோ ஆதாரங்கள்.. நாட்டையே உலுக்கியுள்ள மற்றொரு சம்பவம்
ஒரு பெண் எம்.பி.யின் மேசை மீது தவறான செயல் செய்வது உட்பட, அரசு ஊழியர்கள் நாடாளுமன்றத்தில் பாலியல் செயல்களைச் செய்த வீடியோக்கள் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பிரதமர் ஸ்காட் மோரிசனின் நிர்வாகம் மற்றொரு பெரிய பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய பிராரளுமன்றத்தில் சமீபத்தில் ஒருபெண் அரசாங்க ஆலோசகர் சக ஊழியரால் பாலியல் பலாத்காரத்துக்கு அல்லது சம்பவம் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் நடக்கும் பாலியல் செயல்களின் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ள பல ஆண் அரசு ஊழியர்கள் பேஸ்புக் மெசஞ்சர் குழுவை அமைத்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலிருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
இது குறித்து பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது அரசாங்கத்தை உலுக்கிய சமீபத்திய பாலியல் குற்றங்களால் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு "அருவருப்பான மற்றும் மோசமான" செயல் என்று கூறிய அவர், குற்றம் சாட்டப்பட்ட உறுப்பினரை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறினார்.
மேலும், பெண்களை அரசியலுக்கு ஈர்ப்பதற்கு மேலும் பலவற்றை செய்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், ஸ்காட் மோரிசனின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தங்கள் வெறுப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.