பிரித்தானிய நகரமொன்றில் வேகமாகப் பரவும் மோசமான நோய்: நூற்றுக்கணக்கானோருக்கு திடீர் பாதிப்பு
பிரித்தானிய நகரமொன்றில், திடீரென நூற்றுக்கணக்கானோர் வேகமாகப் பரவும் மோசமான நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுவரும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கானோருக்கு திடீர் பாதிப்பு
இங்கிலாந்திலுள்ள Brixham என்னும் நகரில் நூற்றுக்கணக்கானோர் இரண்டு வாரங்களாக வயிற்றுப்போக்கால் அவதியுற்றுவருகிறார்கள்.
Credit: Getty
Tanya Matthews என்னும் பெண், தான் வாழும் தெருவில் உள்ள அனைத்து விடுகளிலுள்ளவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அது cryptosporidium என்னும் நோய்க்கிருமியால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு ஏஜன்சி அது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவருகிறது.
Credit: Alamy
இந்த Cryptosporidium என்னும் நோய்க்கிருமி, பாதிக்கப்பட்ட தண்ணீரில் நீந்துவதன்மூலமும், நோய்க்கிருமி கலந்த தண்ணீரைக் குடிப்பதன்மூலமும் பரவுகிறது. அது உணவின் மூலமும் பரவக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |