2 குழந்தைகளுடன் வசிக்கும் தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகையை காதலிக்கும் இளைஞர்! 16 வயது வித்தியாசம் குறித்து மனம் திறப்பு
பிரபல நடிகை சுஷ்மிதா சென்-னை 2 ஆண்டுகளாக காதலிக்கும் அவரை விட 16 வயது இளையவரான ரோமன் ஷவல் அது தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
தமிழில் வெளியான ரட்சகன், முதல்வன் திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுஷ்மிதா சென் (45).
இவர் ரெனி மற்றும் அலிஷா என்ற பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சுஷ்மிதா சென்னும் ரோமன் ஷ்வல் (29) என்ற இளைஞரும் 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இருவரின் வயது வித்தியாசம் விமர்சனங்களை கிளப்பி வரும் நிலையில் அது தொடர்பில் ரோமன் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், சுஷ்மிதாவை சந்தித்த பிறகு தான் என் வாழ்க்கையில் எல்லாமே மாறியது.
எங்களின் வயது வித்தியாசம் குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நாங்கள் இருவரும் கவலைப்பட்டதில்லை.
ஆண்கள் எந்த வயதிலும் முதிர்ச்சியடையாததால், முதிர்ச்சியைத் தேடுகிறார்கள்.
ஒரு வலிமையான பெண் உங்கள் வாழ்க்கையில் நுழையும் போது, நீங்களும் அதிக திறன் கொண்டவர் என்பதை புரிந்துகொள்கிறீர்கள். அவள் உங்களை ஒரு ஆணாக மாற்றுகிறாள்.
நாங்கள் நால்வரும் ஏற்கனவே ஒரு குடும்பமாக தான் வாழ்கிறோம். சுஷ்மிதாவின் 2 குழந்தைகளுக்கும் நான் தந்தையாகவும், தோழனாகவும் இருக்கிறேன்.
எங்கள் திருமணம் தொடர்பில் என் குடும்பத்தில் இருந்து எந்தவொரு அழுத்தமும் தரப்படவில்லை.
என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி நிபந்தனையின்றி என்னை ஆதரிக்கிறார்கள். உண்மையில், நான் சுஷ்மிதாவுடன் டேட்டிங் செய்யத் தொடங்கியபோது, அதைப் பற்றி நான் அவர்களிடம் கூட சொல்லவில்லை.
எங்களின் திருமணம் நடைப்பெற்றால் அதை மறைக்க மாட்டோம் என கூறியுள்ளார்.