யாரென்று தெரியாமல் அழகான இளம்பெண்ணிடம் வம்பு செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட இளைஞர்
தாய்லாந்தில் ஒரு இளம்பெண்ணிடம் வம்பு செய்துகொண்டே இருந்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.
ஆனால், அவரது தொல்லை எல்லை மீறவே, அந்த அழகிய இளம்பெண் அவரைத் துவைத்து எடுத்துவிட்டார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்களுடன் உணவருந்தச் சென்றுள்ளார் Pareploy Saeaia (25) என்ற அழகிய இளம்பெண்.
அப்போது அவரிடம் வம்பு செய்துகொண்டே இருந்திருக்கிறார் Chainarong Mareejan (35) என்ற நபர். அவர் Saeaiaவிடம் மொபைல் எண்ணைக் கேட்டு வற்புறுத்த அவர் மறுத்துள்ளார்.
கோபமடைந்த Mareejan தனது கையில் வைத்திருந்த மதுபானக் கோப்பையை Saeaiaவின் தலையில் கவிழ்த்து அவர் தலையில் மதுபானத்தைக் கொட்டியிருக்கிறார்.
உடனடியாக எழுந்த Saeaia, தில் இருந்தால் என்னுடன் மோதிப்பார் என்று சத்தமிட, Mareejan மெதுவாக அங்கிருந்து நழுவ முயன்றிருக்கிறார். விடாமல் பின்தொடர்ந்த Saeaia நான்கு உதை விட Mareejanக்கு அப்போதுதான் தான் தவறான பெண்ணிடம் வம்பு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
ஆம், Saeaia ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை. 13 வயது முதலே குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட Saeaia, தான் கலந்துகொண்ட 50 போட்டிகளில் 40இல் வெற்றி பெற்றவர்.
அவரிடம் சிக்கினால் Mareejanஇன் நிலைமை என்ன ஆகும் என்பதைப் புரிந்த Saeaiaவின் நண்பர்கள் அவரைத் தடுக்க முயல, அப்படியும் நன்றாக சாத்து சாத்து என்று சாத்திவிட்டுத்தான் அங்கிருந்து நகர்ந்துள்ளார் Saeaia.
உதை வாங்கிய Mareejan, இனி ஜென்மத்துக்கும் எந்த அழகான பெண்ணிடமும் மொபைல் நம்பர் கேட்க முயற்சிக்கமாட்டார் என்பது மட்டும் உறுதி!