சிறுத்தையை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற இளைஞர்! ஷாக் வீடியோ
கர்நாடகாவில், சிறுத்தை ஒன்றை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தையை இழுத்துச் சென்ற இளைஞர்:
கர்நாடகா, ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்ற வேணுகோபால் தன்னுடைய பைக்கில் சிறுத்தை ஒன்றை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வேணுகோபால், தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்காது. அப்போது, புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று அவரை தாக்கியுள்ளது. பின்னர், அதிர்ச்சியடைந்த அவர் சிறுத்தையிடம் சண்டையிட்டுள்ளார்.
அவர் சிறுத்தையிடம் இருந்து தன்னை பாதுகாப்பதற்காக சிறுத்தையின் கால்களை கயிற்றினால் காட்டியுள்ளார். பின்பு, தனது வாகனத்தின் பின்புறத்தில் கால்களை கட்டி வனத்துறை அலுவலகத்திற்கு சென்றார்.
தற்போது, சிறுத்தை பைக்கின் பின்புறம் கட்டப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பிற்காகவே அப்படி செய்தேன்
முத்து, தனது தோட்டத்தில் சிறுத்தையை பார்த்ததால், தற்காப்புக்காக சிறுத்தையை கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார். இதையடுத்து, சிறுத்தையை கயிறு மூலம் கட்டிய போது முத்துவுக்கு கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
முத்துவுக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவர் "விழிப்புணர்வு இல்லாமல் சிறுத்தையை கையாண்ட விதம் மோசமாக இருந்தது" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், சிறுத்தை பலவீனமாக இருப்பதாகவும், அதனால் பாதிப்பில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளது.
இதற்கிடையில், இதே போன்ற நிகழ்வுகளைக் கையாள்வது குறித்த விழிப்புணர்வைப் பெற முத்து ஆலோசனை அமர்வுக்கு அனுப்பப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |