கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நபருக்கு அருகில் இருந்த நாயை கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை! அதிர்ச்சியூட்டும் வீடியோ
இந்திய மாநிலம் மகராஷ்ட்ராவில் தூங்கி கொண்டிருந்த நாயை, சிறுத்தை கவ்விக் கொண்டு ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாயை கவ்விய சிறுத்தை
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் தூங்கி கிடந்த நாயை, சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனரான நேகா பஞ்சாமியா என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
What leopards in agricultural landscapes of western Maharashtra thrive on and bring them SO close to humans = अन्न आणि निवारा i.e. safe shelter in dense sugarcane fields, banana plantations etc. and free-ranging dogs as a common source of food. This leopard knew exactly what he… pic.twitter.com/43vs7kGJcN
— Neha Panchamiya (@neha_panchamiya) May 16, 2023
அந்த வீடியோவில் லொறிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு ஓட்டுநர் தூங்கி கொண்டிருந்திருக்கிறார், அவருக்கு அருகே நாய் ஒன்று படுத்திருக்கிறது.
அதிர்ச்சியூட்டும் வீடியோ
அப்போது மெதுவாக பதுங்கி பதுங்கி வந்த சிறுத்தை ஒன்று, படுத்திருந்த நாயின் அருகே சென்று நாயின் கழுத்தை கவ்வி தூக்கி கொண்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடுகிறது.
@gettyimages
அச்சமயம் அங்கே தூங்கி கொண்டிருந்த நபர் சத்தம் கேட்டு விழித்து பார்க்கிறார். அவருக்கு என்ன நடந்தது என சுத்தமாக தெரியவில்லை.
பின்னர் மறுநாள் அங்கிருந்த சிசிடிவியில் பார்க்கும் போது, காட்டுக்குள் இருந்து வந்த சிறுத்தை நாயை தூக்கி கொண்டு ஓடுவது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோவை நேகா பஞ்சாமியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சில மணி நேரத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. மேலும் மனிதர்களின் இருப்பிடத்தில், இது போன்ற சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.