தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய இளைஞர்.., விசாரணையில் தெரியவந்த உண்மை
நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் வீட்டில் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செருப்பு வீசிய நபர்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவானது மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் இருக்கும் போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் நடைபெற இருக்க்கிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில், நீலாங்கரையில் இருக்கும் தவெக தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நேரமாக கையில் செருப்பை வைத்திருந்த இளைஞர், வீட்டுக்குள் செருப்பை வீசிவிட்டு சென்றார். உடனே அங்கிருந்த காவலர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர் விஜய் படங்களில் வரும் பன்ச் வசனங்களை பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |