இது தற்கொலைக்கு சமம்! நாங்க பலிகடா ஆக விரும்பல: நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
கொரோனா சமயத்தில் தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பிரபல மருத்துவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இது தொடர்பிலான கோரிக்கையை வைத்த நிலையில் இதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும், சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகிறது.
கொரோனா சமயத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதித்தது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்...
"டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் தமிழக அரசே, முன்கள பணியாளர்களாகிய நாங்கள் மிகவும் சோர்வாக உள்ளோம், மூச்சுவிட நேரம் வேண்டும், சிலரின் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.
கொரோனா சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிப்பது தற்கொலைக்கு சமம். சட்டம் இயற்றுபவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை" என குறிப்பிட்டுள்ள அவர், "மெதுவாக அணையும் தீயை தூண்டிவிட வேண்டாம்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.