இலங்கை சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பிரித்தானிய கோடீஸ்வரர்: கையும் களவுமாக பிடித்த பொலிஸார்
இலங்கையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிரித்தானிய குடிமகன் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய குடிமகன் இலங்கையில் கைது
இலங்கையின் காலி, ஹபராதுவ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 23ம் திகதி பிற்பகலில் பிரித்தானிய குடிமகன் ஒருவர் சுமார் 2,590 ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர் பிரித்தானியாவை சேர்ந்த 65 வயது Moti Graham Anderson என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில், அவர் சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சொஸேஜ் வகைகள் மற்றும் காய்கறி வகைகளையே திருடியுள்ளார்.
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த அதிகாரிகள், இதே நபர் இதற்கு முன்னதாக ஒரு நாளும் இந்த சூப்பர் மார்க்கெட்டில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 65 வயது Moti Graham Anderson இலங்கைக்கு வருவதற்கு முன்னர் பிரித்தானியாவில் கோடீஸ்வர தொழிலதிபராக இருந்துள்ளார்.
பறிப்போன காணி
கைது நடவடிக்கையை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ததாகவும் அந்தக் காணிகள் பறிபோயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரிடம் வெறும் 3 மாதங்கள் இலங்கையில் தங்கி இருப்பதற்கான விசா மட்டுமே இருந்துள்ளது.
மேலும் இவரது மகன்களில் ஒருவர் பிரித்தானியாவில் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |