எதிரிகளிடமிருந்து ஆண்டுக்கு 100,000 உடல் உறுப்புகள் திருட்டு... நாடு ஒன்றில் நடக்கும் பயங்கரம்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமுதாயம்
சீனாவில் ஆண்டொன்றிற்கு 100,000 அரசியல் எதிரிகள் மற்றும் அரசியல் கைதிகளிடமிருந்து உடல் உறுப்புகள் திருடப்படுவதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தென் கொரிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று நெட்ப்ளிக்சில் பிரபலமானது. 90 நாடுகளிலுள்ள பார்வையாளர்களை அந்த பயங்கர தொலைக்காட்சித் தொடர் கவர்ந்தது. நெட்ப்ளிக்ஸ் வரலாற்றிலே அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சித் தொடராக அது மாறியுள்ளது.
அந்த தொடரில், யாருக்காவது உறுப்பு தானம் தேவையானால், ஒருவரைக் கொன்று அவரது மனித உடல் உறுப்புகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காட்டப்படுகிறதாம்.
இந்நிலையில், உண்மையாகவே அப்படி ஒரு பயங்கரம் சீனாவில் நடப்பதாக பகீர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, ஆண்டொன்றிற்கு, தங்கள் கட்சியை எதிர்ப்போர் மற்றும் அரசியல் கைதிகளான சுமார் 100,000 பேர்களிடமிருந்து இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் விழித்திரை(cornea)களை அகற்றி விற்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனால், சீனா அளிக்கும் போலியான மருத்துவமனை தரவுகளை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்திலிருப்பதால், இந்த பயங்கர உறுப்புக் கொள்ளையை தடுக்க இயலாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைவிட சர்வதேச சமுதாயத்திற்கு வேறு வழியில்லை என கூறப்படுகிறது.
உறுப்புகள் திருடப்படும் தகவலை உறுதி செய்ய, போலியாக தங்களுக்கு உடல் உறுப்பு தேவை என்பது போல சீன மருத்துவமனைகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர் விசாரணை அதிகாரிகள். அப்போது, தங்களுக்கு மாதம் தோறும் ஏராளமான உடல் உறுப்புகள் வரும் என்றும், உடனடியாக உடல் உறுப்பு தானம் பெறலாம் என்றும் கூறியுள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.
அதாவது, ஒருவருக்கு உடல் உறுப்பு, உதாரணமாக சிறுநீரகம் வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் ஒரு சீன மருத்துவமனையைத் தொடர்புகொண்டால், சிறையிலிருக்கும் அரசியல் கைதி ஒருவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் போட்டு அவரது சிறுநீரகத்தை எடுத்து உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள் (அது உங்களுக்கு பொருந்துமானால்!).
ஆனால், அதிகாரப்பூர்வமாக, குறிப்பிட்ட அளவிலேயே உடல் உறுப்பு தானம் சட்டப்படி நடப்பதாக சீனா உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவமனை தரவுகளை அனுப்பிவிடும். ஆகவே, சீனாவைக் கேள்வி கேட்க முடியாது.
கொரோனா பரவல் குறித்து விசாரிப்பதற்காக சீனாவுக்கு சென்றவர்களே ஒன்றும் கண்டுபிடிக்கமுடியாதபோது, இந்த உடல் உறுப்புக் கொள்ளையை மட்டும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியுமா என்ன?