சாலையில் கிடந்த செல்போன்…உரிமையாளரின் வங்கியில் இருந்து ரூ.6 லட்சத்துக்கு 4 ஐபோன்கள் வாங்கிய திருடன்
சாலையில் கிடந்த செல்போனில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடி ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த திருடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 லட்சம் ரூபாய் திருட்டு
சென்னை மண்ணடி தாய்ப்பன் தெருவை சேர்ந்த மரிய ஜோசப் என்பவர் வெளியில் சென்று இருந்த போது தவறுதலாக தன்னுடைய செல்போனை தொலைத்துள்ளார்.
அதே சமயம் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த மரிய ஜோசப் உடனடியாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், நூருதீன் என்பவர் சாலையில் கிடந்த செல்போன் மூலம் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடி ஆன்லைனில் ஐ-போனை வாங்கியது தெரியவந்துள்ளது.
மேலும் நெட்பேங்கிங் மூலம் எடுக்கப்பட்ட பணத்தில் அமேசான் தளத்தில் இருந்து 4 iPhone வாங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியில் டெலிவரி நபர்கள் அளித்த தகவல் மற்றும் மொபைல் எண் மூலம் நூருதீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |