டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்துக்குள் இரு வேறு வழக்கறிஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் துப்பாக்கிச்சூடு நடந்தது எனக் கூறப்படுகிறது.
வழக்கறிஞர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதால், அவர்களில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இந்த தகராறில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே.மனன், இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். ஆயுதங்களுக்கு உரிமம் உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும்.
ஆயுதங்கள் உரிமம் பெற்றிருந்தாலும், எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு யாரும் நீதிமன்ற வளாகத்தினுள் அல்லது அதைச் சுற்றி இதைப் பயன்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |