அந்த மிருகங்களை விட்டு விடாதீர்கள்... மூத்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரின் அதிர்ச்சி காணொளி
பாலஸ்தீன மக்களை வீடு புகுந்து கொன்று விடுங்கள் என இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் மக்களுக்கும் ஆலோசனை வழங்கும் ஒரு மூத்த ராணுவ வீரரின் காணொளி ஒன்று சமூக ஊடக பக்கங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த குடும்பங்களையும்
இஸ்ரேலியரான முன்னாள் ராணுவ வீரர். 95 வயதான Ezra Yachin என்பவரே, காஸா பகுதிக்குள் நுழைந்து சிறார்கள் உட்பட மொத்த குடும்பங்களையும் கொன்று தள்ள கோரிக்கை விடுப்பவர்.
“These animals can no longer live.”
— Al Jazeera English (@AJEnglish) October 14, 2023
95-year-old Israeli army reservist Ezra Yachin was filmed calling on Israeli troops to kill families and children along with Hamas fighters in Gaza ⤵️ pic.twitter.com/ZLjCM2Fj65
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நெருக்கடியான கலகட்டத்தில் நாட்டுக்காக பணியாற்ற தயார் என்பவர்கள் பட்டியலில் இருக்கும் நபர் இந்த Ezra Yachin. இவரே சக ராணுவ வீரர்களிடம், அந்த மிருகங்களை வாழ விடாதீர்கள் என கொந்தளிப்பவர்.
காஸா பகுதிக்குள் நுழைந்து மிக விரைவாக முடித்து விடுங்கள், அவர்களின் நினைவு கூட மிஞ்ச வேண்டாம். நாளை ஹிஸ்புல்லா அமைப்பு போரில் இணைந்து நம் மீது வான் தாக்குதலை தொடுக்கலாம்.
@alamy
நாம் தயாராகி இருக்கிறோம்
சுற்றுவட்டாரத்தில் உள்ள அரேபிய நாடுகள் ஒன்று திரண்டு நமக்கெதிராக திரும்பலாம். அதனால் எந்த சாக்குப்போக்கும் வேண்டாம், இப்போதே புறப்படுங்கள், உங்களுக்கு அரேபியர் ஒருவர் அண்டைவீட்டாராக இருந்தால், அவர் உங்கள் வீட்டுக்கு புகுந்து தாக்கும் வரையில் காத்திருக்க வேண்டாம்.
@epa
முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் தயாராகி இருக்கிறோம், இனி முடிவு காணாமல் வெளியேறுவதாக இல்லை. அரேபியர்களின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை தொடங்குங்கள் எனவும் அந்த முன்னாள் ராணுவ வீரர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரது இந்த காணொளி முக்கிய ஊடகங்களில் வெளியானதுடன், சமூக ஊடகங்களிலும் பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |