அமெரிக்காவில் எந்த நாட்டை சேர்ந்த மக்கள் அதிகம் சம்பாதிக்கின்றன் தெரியுமா? வெளியான ஆய்வறிக்கை
அமெரிக்காவில் அதிக வருவாய் ஈட்டுவதில் இந்திய வம்சாவளி குடும்பங்கள் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் ஈட்டும் வருவாய் குறித்து ஆசிய - பசிபிக் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கான தேசிய கூட்டுக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவில் வசிக்கும் உயர் வருவாய் பிரிவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பத்தினர் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய்சம்பாதிக்கின்றனர்.
மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர்35 லட்சம் ரூபாய் ஆப்ரிக்க - அமெரிக்கர்கள் 31 லட்சம் ரூபாய் லத்தீன் அமெரிக்கர்கள் 39 லட்சம் ரூபாய் வருவாய்ஈட்டுகின்றனர்.நடுத்தர வருவாய் குடும்பங்களில் ஆசிய குடும்பங்கள் ஆண்டுக்கு 66 லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றன.
இது ஆப்ரிக்க - அமெரிக்க குடும்பங்கள் ஈட்டும் வருவாயை விட இரு மடங்கு அதிகம்.வறுமை விகிதம் வீட்டு உரிமை வாடகை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆசிய - பசிபிக் பிராந்திய குடும்பங்களின் பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு அதிகம் இருப்பதுதெரியவந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Dina Malar-