இந்த வெளிநாட்டவர்கள் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்: பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிட்டு வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
செப்டம்பரில் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன் கொண்டுவரப்பட இருக்கும் இந்த திட்டம் குறித்த அறிவிப்பை பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin சென்ற வார இறுதியில் வெளியிட்டார்.
இந்த சட்டத்தால் யாருக்கு பாதிப்பு?
ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் நீண்ட கால வாழிட அனுமதி வைத்திருந்தாலும் சரி, நிரந்தர வாழிட அனுமதி வைத்திருந்தாலும் சரி, அவர்கள் பணிக்காக வந்திருந்தாலும் சரி, கல்விக்காகவோ, ஓய்வுக்காகவோ வந்திருந்தாலும் சரி, குற்றச்செயல்களில் ஈடுபட்டால் பாதிக்கப்படுவார்கள்.
எத்தகைய குற்றங்கள்?
கொள்ளை, பாலியல் குற்றங்கள், தாக்குதல், போதை கடத்தல் மற்றும் தீவிரவாதக் குற்றங்கள்.
ஆக, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாட்டவர்கள், அவர்கள் கொள்ளை, பாலியல் குற்றங்கள், தாக்குதல், போதை கடத்தல் மற்றும் தீவிரவாதக் குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலையில், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் வெளியான பின்னர் அதன் சாராம்சங்கள் தெளிவாக விவரிக்கப்படும்.