இந்திய விளையாட்டில் இவை மாற வேண்டும்...! தங்க மகன் நீரஜ் சோப்ரா ஓபன் டாக்
ஒரு தங்கப் பதக்கத்துடன் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது என தங்க மகன் நீரஜ் சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதல் மற்றும் ஒரே ஒரு தங்கப் பதக்கம் இதுவாகும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற 23 வயதான நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பரிசுத் தொகைகளை அறிவித்தன.
இந்நிலையில் தனியார் செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, நமக்கான கவனம் உண்மையில் முக்கியமானது தான், ஆனால் மாத இறுதியில் Diamond League நடைபெறவிருக்கிறது.
நான் அதில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன், ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து திரும்பியவுடன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக எனது பயிற்சி முற்றிலும் தடைப்பட்டது. நானும் நோய்வாய்ப்பட்டேன்.
இதனால், Diamond League-ல் என்னால் பங்கேற்ற முடியவில்லை.
இது போன்ற விஷயங்கள் இந்திய விளையாட்டில் மாற வேண்டும். மற்ற அனைத்து ஒலிம்பிக் சாம்பியன்களும் Diamond League-ல் பங்கேற்கிறார்கள்.
ஒரு தங்கப் பதக்கத்துடன் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. உலக அளவில் நாம் சிந்திக்க வேண்டும்.
Diamond Leagues போன்ற உலகளாவிய நிகழ்வுகளில் நாங்கள் தொடர்ந்து அசத்த வேண்டும் என நீரஜ் சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.