மே மாதம் மிதுனத்தில் குடியேறும் குரு.., பணமழையை அள்ளப்போகும் ராசிகள் யார்?
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
இந்த வருடம், மே 14 அன்று இரவு 11:20 மணிக்கு, குரு ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
இதனால் எந்த ராசிகளுக்கு எப்படி பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
குருவின் பெயர்ச்சி மங்கள பலனைத் தரும். திருமணம் நடைபெறும். அதிர்ஷ்டம் பெருகும். பயணம் செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். கூட்டுத் தொழில் பலன் தரும். நிதி ஆதாயங்கள் உண்டாகும்.
ரிஷபம்
வாழ்க்கையில் வெற்றியைத் தரும். முன்னேற்றத்தை தரும். வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும், நிதி நிலைமை வலுவடையும், சமூக மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
மிதுனம்
குருவின் பெயர்ச்சி நிதி பலத்தை பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். மரியாதை அதிகரிக்கும்.
கடகம்
குரு பெயர்ச்சியால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். எதிலும் முழு கவனம் முக்கியமாகத் தேவைப்படும். அலுவலகத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். வறட்டு கௌரவம் பார்க்க வேண்டாம்.
சிம்மம்
குருவின் பெயர்ச்சி புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பை பெறுவார்கள் அல்லது புதிய வீடு, கார் வாங்கலாம். தொழிலில் வெற்றி பொங்கும். நிலை நிலை வலுவடையும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.
கன்னி
குருவின் பெயர்ச்சியால் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் பண லாபம் உண்டாகும். மேலும் புதிய வேலை கிடைக்கலாம். அல்லது பிடித்த இடத்தில் வேலையில் மாற்றம் ஏற்படலாம், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
துலாம்
குருவின் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். கௌரவம் அதிகரிக்கும். சமூக அந்தஸ்து உயரும். குருவின் ஆசியை பெறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம்.
விருச்சிகம்
குரு பெயர்ச்சியால் சொத்துகள் சேரும். வீடு, நிலம் வாங்கலாம். ஆடை, நகை மாதிரியான ஆபரணங்கள் சேரும்.
தனுசு
குருவின் பெயர்ச்சியால் பயனடைவார்கள். கல்வி மற்றும் ஆன்மீக வழிபாடலில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் நடைபெறும். நாள்பட்ட நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மகரம்
குரு பெயர்ச்சி நன்மைகள் அதிகரிக்கும். உடல்நலத்தில் அக்கறையும் முக்கியம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். சகோதர உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம்.
கும்பம்
அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். ஏழரை சனி முடிவு பெற்றதால், இனி வரும் காலம் அற்புதமாக இருக்கும்.
மீனம்
குரு பெயர்ச்சியால் அதிகரித்து சங்கடங்கள் குறையும். வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். வரவு சீராகும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |