இனி இவர்களுக்கு பிரான்சுக்குள் நுழைய அனுமதி இல்லை
பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
ஒருவர் ஒன்பது மாதங்கள் அல்லது அதற்கு முன் கொரோனா தடுப்பூசி பெற்றவராக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு பிரான்சுக்குள் நுழைய அனுமதி இல்லை.
அதாவது, கடந்த மே மாதத்திற்கு முன் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள், தற்போது பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு பிரான்சுக்குள் நுழைய அனுமதி.
சமீபத்தில் தடுப்பூசி பெறாதவர்கள், அல்லது பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் தடுப்பூசி பெறாதவர்களாகவே நடத்தப்படுவார்கள்.
தங்கள் உறவினர்கள் யாராவது மரணப்படுக்கையில் இருப்பது போன்ற சூழல் தவிர்த்து, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் அவர்கள் பிரான்சுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.