பிரெஞ்சு குடியுரிமையை கைவிட்டு... நாடொன்றின் ஜனாதிபதியாக களமிறங்கவிருக்கும் பிரபலம்
Credit Suisse நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் தனது பிரெஞ்சு குடியுரிமையை கைவிட்டு, நாடொன்றின் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
PDCI கட்சி சார்பாக
அவர் பிரெஞ்சு குடியுரிமையை கைவிட்டுள்ளதாக பிரெஞ்சு அரசாங்க வர்த்தமானியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி கோகோ உற்பத்தியாளரான ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் Tidjane Thiam களமிறங்கவிருக்கிறார்.
இவரே சுவிட்சர்லாந்து நிறுவனமான Credit Suisse-ல் முன்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர். அக்டோபர் மாதத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் PDCI கட்சி சார்பாக தியாம் களமிறங்க இருக்கிறார்.
இருப்பினும், 83 வயதான தற்போதைய ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா மீண்டும் போட்டியிடுவாரா என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. 2000களின் முற்பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போரிலிருந்து படிப்படியாக மீண்டு,
ஆப்பிரிக்க கண்டத்தின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான மேற்கு ஆப்பிரிக்க வல்லரசாக தனது இடத்தை ஐவரி கோஸ்ட் மீண்டும் பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக தியாம் கடந்த மாதம் அறிவித்தார். இருப்பினும், ஐவரி கோஸ்ட் சட்டத்தின் அடிப்படையில், வேட்பாளர்கள் ஐவோரிய குடிமக்களாக இருக்க வேண்டும் வேறு எந்த நாட்டு குடியுரிமையும் கொண்டிருக்க முடியாது.
இந்த நிலையில் தமது பிரெஞ்சு கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டு, குடியுரிமையை அவர் கைவிட்டுள்ளதாக வியாழக்கிழமை பிரெஞ்சு அரசாங்க வர்த்தமானியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐவோரியன் குடியுரிமை
62 வயதான தியாம், 1999 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியில் முன்னாள் ஜனாதிபதி ஹென்றி கோனன் பேடி பதவி நீக்கம் செய்யப்படும் வரை ஐவரி கோஸ்டில் அமைச்சராகப் பணியாற்றினார்.
பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறி, மெக்கின்சி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான அவிவா மற்றும் புருடென்ஷியலில் பணிபுரிந்தார், பின்னர் 2015 ல் கிரெடிட் சூயிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார்.
வியாழக்கிழமை அவரது குடியுரிமை குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும், தியாமின் அரசியல் திட்டங்களுக்கு சவால்கள் இருப்பதாகவே கூறப்படுகிறது. PDCI கட்சியை பொறுத்தமட்டில் தலைமைப் பதவிகளுக்கு ஐவோரியன் குடியுரிமை கட்டாயம் என வெளிப்படையாகக் கோரவில்லை.
மட்டுமின்றி, தியாம் தனது ஐவோரியன் குடியுரிமையை இதுவரை கைவிடவும் இல்லை. இந்த நிலையில், ஐவோரியன் அரசியல் ஆய்வாளர் ஆர்தர் பங்கா கூறுகையில், தியாம் போட்டியிட அனுமதிக்கப்படுவாரா என்பதை அறிய ஆகஸ்ட் மாதம் அரசியலமைப்பு கவுன்சில் தனது வேட்புமனுவை சரிபார்க்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றார்.
மட்டுமின்றி, தியாம் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றதன் மூலம், அவரது ஐவோரியன் குடியுரிமை தானாகவே ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படலாம் என்ற சிக்கலும் இருப்பதாக ஆர்தர் பங்கா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |