கனடாவில் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து மணியை திருடிய நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
Thief sentenced for stealing gong from Kitchener hospital: புற்றுநோய் மருத்துவமனையில் இருந்த மணியை திருடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளது.
மணியை திருடிய நபர்
கனடாவின் கிச்சனர்(Kitchener) நகரில் அமைந்துள்ள வாட்டர்லூ பிராந்திய சுகாதார நெட்வொர்க் புற்றுநோய் மையத்தில்(Waterloo Regional Health Network’s (WRHN)) இருந்து 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நோயாளி தங்கள் சிகிச்சை நிறைவு பெற்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாட அடிக்கும் மணியை திருடியுள்ளார்.
ஏப்ரல் 25ம் திகதி நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளி விக்டோரியா மற்றும் வெபர் வீதி பகுதியில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த தற்காலிக முகாமிற்கு அருகில் இருந்த இடத்தில் இருந்து மணியை மீட்டு மீண்டும் மருத்துவமனையிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில், குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தை தண்டனை காலமாக கணக்கிட்டு, ஒரு வருட நன்னடத்தை கண்காணிப்புடன் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
குற்றம் நிகழ்ந்த போது தான் மது போதையில் இருந்ததாகவும், தன்னுடைய செயலால் சமூகம் அடைந்த வேதனையை எண்ணி மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |