ஸ்பெயினில் வில்லேனா தங்க பொக்கிஷம் கொள்ளை: சில நிமிடங்களில் நடந்த துணிகர திருட்டு
ஸ்பெயின் நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்து வெண்கல காலத்து தங்கப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட வெண்கல காலத்து தங்கம்
ஸ்பெயின் நாட்டின் அலிகாண்ட் மாகாணத்தில் உள்ள வில்லேனா(Villena) தொல்லியல் அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5:20 மணி அளவில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்முறை கொள்ளையர்கள் சில நிமிடங்களில் அரங்கேற்றிய கொள்ளை சம்பவத்தில் உலகப் புகழ்பெற்ற வில்லேனா பொக்கிஷம்(Treasure of Villena) முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பல வாகனங்களில் வந்த கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து 4 நிமிடங்களுக்குள் ஒட்டுமொத்த வில்லேனா பொக்கிஷத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்
பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செயல்பட்ட போதிலும், துல்லியமான திட்டமிடலுடன் வந்த கொள்ளையர்கள் வில்லேனா பொக்கிஷத்தின் பெரும்பாலான பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

3 வெள்ளிப் பாத்திரங்கள், ஒரு வளையல், ஒரு தோடு, மற்றும் சேகரிப்பில் இருந்த 4 கிரீடங்களில் ஒன்றை மட்டுமே கொள்ளையர்கள் தவறவிட்டு விட்டு சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷம் கி.மு 1300 முதல் கி.மு 1000 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது ஆகும். 1963ம் ஆண்டு தொல்லியல் நிபுணர் ஜோஸ் மரியா சோலர் என்பவரால் வறண்ட நதிக்கரையொட்டி வில்லேனா பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்ட தங்கம் சார்ந்த பொருட்களை கொண்ட இதில் பாட்டில்கள், 28 வளையல்கள், 11 கிண்ணங்கள் ஆகியவை இருந்தன.
இதன் தங்க மதிப்பு மட்டும் சுமார் 1.7 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |