ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் செய்யக்கூடாத 5 விஷயங்கள் இவைதான்!
கையில் ஸ்மார்ட்போன் தவழாத மனிதர்களை பார்ப்பதே மிக மிக அரிதாகிவிட்டது! அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.
செல்போன் பயன்படுவதால் பல நன்மைகள் இருந்தாலும் அதை வைத்து செய்யக்கூடாத சில முக்கிய விஷயங்களும் உள்ளன.
கடவுச்சொல்
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. அந்த சமயத்தில் நாம் இருக்கும் இடத்தையும் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்துவிடுவதால் அது உயிரையே பறித்துவிடும்.
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலர் கடவுச்சொல் பாதுகாப்பு இல்லாமல் அதை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக யார் வேண்டுமானாலும் அதன் மென்பொருளை அணுகலாம் மற்றும் மின்னஞ்சல்கள், வங்கி விபரங்கள், சமூகவலைதள விபரங்களை அணுக முடியும், எனவே ஸ்மார்ட்போன்கள் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
gizbot
நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்து எந்தவொரு செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.
சைபர் குற்றவாளிகள்
பாதுகாப்பற்ற நெட்வொர்க்குள் மூலம் பயனர்கள் தங்களின் நிறுவனம் மற்றும் பணி தொடர்பான மின்னஞ்சல்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பகிரக்கூடாது. ஏனெனில் சைபர் குற்றவாளிகள் பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளை உளவுபார்த்து தரவுகளை திருடுகின்றனர்.
தொழில்நுட்பம் தற்போது உச்சத்தில் உள்ள இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்கின்றனர். அதன்படி எஸ்.எம்.எஸ் மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமோ தெரியாத எண்ணில் இருந்து சந்தேகப்படும் படியான லிங்க் வந்தால் அதை மறந்தும் க்ளிக் செய்யக்கூடாது.
gadgetsnow