18 வயதாகும் உங்க பிள்ளைகளுக்கு நீங்க செய்ய வேண்டியது என்ன?
Are your children 18 years old essential things: உங்களது பிள்ளைகள் 18 வயதை அடையும் போது செய்ய வேண்டிய விடயத்தினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
வீட்டில் இருக்கும் பிள்ளைகள் 18 வயது அடையும் போது, அவர்களுக்கான சில விடயங்களை பெற்றோர்கள் கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும்.
முந்தைய காலத்தில் அனைத்து காரியத்திற்கு அலைந்து திரிய வேண்டியதாயிருந்தது. ஆனால் தற்போது அனைத்து விடயத்தையும் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு செய்து கொள்ள முடிகின்றது.
உங்களது பிள்ளைகள் பள்ளிப்படிப்பினை முடித்து கல்லூரிக்கு செல்கின்றனர் என்றால் அவர்களின் வயது 18 ஆகிவிடும்.
இந்த வயதில் அவர்களுக்கான முக்கிய ஆவணத்தினை பெற்றோர்கள் வாங்கி கொடுக்க வேண்டியது முக்கியமாகும்.
அவை என்னென்ன விடயங்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்களது பிள்ளைக்கு 18 வயதாகிவிட்டால், முதலில் அவர்களுக்கு வங்கயில் சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுக்க வேண்டும். பணத்தினை சேமிக்கவும், செலவு செய்யவும் வங்கிக் கணக்கினை பயன்படுத்தும் முறையை கற்றுக்கெடுப்பது அவசியம்.

வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோரின் வாக்காளர் அட்டையை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் விண்ணப்பிக்கும் வாக்காளர் அடையாள அட்டையானது வீட்டிற்கே வந்துவிடும்.

அதே போன்று 18 வயதாகும் பிள்ளைகளுக்கு பான் கார்டு வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு முக்கியமாக பான் கார்டு தேவைப்படுகின்றது. ஆதலால் பான் கார்டு வாங்குவதிலும் தாமதம் எதுவும் வேண்டாம்.

கார், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தாலும், ஓட்டுநர் உரிமம் அவசியம் ஆகும். இருசக்கர வாகனத்திற்கு தனியாகவும், கார் ஓட்டுவதற்கு தனியாகவும் வாங்க வேண்டும்.
இதற்காக ஆறு மாதம் நீங்கள் கார், பைக் இவற்றினை நன்றாக ஓட்டுவதற்கு பழகிய பின்பு ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தினை நன்றாக இயக்கினால் மட்டுமே இந்த ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும். இதையும் நீங்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

மேற்படிப்பு படிப்பதற்காகவோ, அல்லது படித்து முடித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். 18 வயது முடிந்தவுடன் தேவையான ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்வது நல்லது. ஏனெனில் அவசர நேரத்தில் இதனை பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

ஆதார் அட்டையும் அவசியம் ஆகும். ஆதார் ஏற்கனவே குழந்தையாக இருக்கும் போது வாங்கி வைத்திருப்பீர்கள். அதனை 18 வயது பூர்த்தியடைந்துவிட்டால் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
இந்த அப்டேட் 15 வயதில் செய்வதற்கு அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு செய்யாதவர்கள் 18 வயதில் கட்டாயம் செய்துவிட வேண்டும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |