கொரோனா ஊரடங்கின் பிடியில் இன்னொரு முக்கிய நகரம்: 20 மில்லியன் மக்கள் பாதிப்பு
கொரோனா பரவலை அடுத்து மூன்றாவது நகரில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது சீனா.
இதனால் அங்குள்ள 5.5 மில்லியன் மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனன் மாகாணத்தில் அமைந்துள்ள Anyang நகரில் கொரோனா பரவல் கண்டறியப்பட்ட பின்னரே நகர நிர்வாகம் குறித்த ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் ஓமிக்ரான் மாறுபாடு, தற்போது சீன நகரங்களில் பரவி வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஓமிக்ரான் பரவல் சீனாவில் வேகமெடுத்துள்ளது.
ஷியான் நகரில் சுமார் 2,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து சமீபத்தில் 13 மில்லியன் மக்களை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு சீனா உட்படுத்தியது.
மேலும், மூன்று அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், யுசோ நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக தற்போது 20 மில்லியன் மக்கள் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளில் சிக்கியுள்ளனர்.
ஷியான் மற்றும் யுசோ நகரில் டெல்டா மாறுபாடு அதிகமாக பரவி வரும் நிலையில், ஓமிக்ரான் தொடர்பில் இந்த இரு நகரங்களில் எந்த தகவலும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள Tianjin நகரமானது, தலைநக பீஜிங்கில் இருந்து வெறும் 1 மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அது ஒலிம்பிக் போட்டிகளை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, விளையாட்டுகள் நடைபெறுமா என்பதையும் முடிவு செய்யும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்படும் என கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.