தீவிரமடையும் ட்ரம்பின் நடவடிக்கைகள்... மூன்றாவது எண்ணெய் கப்பல் பறிமுதல்
வெனிசுலாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படையால் மீண்டும் ஒரு எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்லா 1 கப்பல்
ஒரே வாரத்தில் பறிமுதல் செய்யப்படும் இது இரண்டாவது எண்ணெய் கப்பல் என்பதுடன், இரண்டு வாரங்களுக்குள் இது மூன்றாவது சம்பவம் என்றும் தெரிய வந்துள்ளது.

வெனிசுலா மீதானத் தடைகளை சட்டவிரோதமாக தவிர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடைசெய்யப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கக் கடலோரக் காவல்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அப்படியான கப்பல்கள் பொய்யான அடையாளங்களுடன் செயல்படுவதாகவே அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள கப்பலானது, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையானது எந்தப் பகுதியில் முன்னெடுக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய மறுத்துள்ளனர். அத்துடன் எண்ணெய் கப்பலின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளனர்.
இருப்பினும் பிரித்தானியாவின் Vanguard குழுமம் மற்றும் அமெரிக்காவின் கடலோரப் பாதுகாப்பு குழுவிடம் இருந்து கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், முற்றுகையிடப்பட்ட கப்பல் Bella 1 என்றே தெரிய வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வெனிசுலாவை நெருங்கும்போது பெல்லா 1 கப்பல் காலியாகவே இருந்துள்ளது. அந்தக் கப்பல் 2021-ஆம் ஆண்டில் வெனிசுலாவின் எண்ணெயை சீனாவுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவையை வழங்கியிருந்தது.

கப்பல் கண்காணிப்பு சேவை வெளியிட்டுள்ள தகவலில், அந்தக் கப்பல் இதற்கு முன்னர் ஈரானிய கச்சா எண்ணெயையும் ஏற்றிச் சென்றிருந்தது.
வெனிசுலாவுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும், தடைகளுக்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
உக்ரைனுக்கு ஊக்கம்
இந்த நிலையில், அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்ட முதல் இரண்டு எண்ணெய் கப்பல்களும், தடைகளுக்கு உட்பட்ட நாடுகளுக்கு எண்ணெய் கடத்தும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதனால், எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற கவலை அமெரிக்க மக்களுக்கு தேவையில்லை என்றே வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார சபையின் இயக்குநர் Kevin Hassett தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு எண்ணெய் வர்த்தகர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், திங்கட்கிழமை ஆசிய வர்த்தகம் மீண்டும் தொடங்கும் போது, இந்த பறிமுதல் நடவடிக்கைகள் எண்ணெய் விலைகளை சற்றே உயர்த்தக்கூடும் என்றார்.
இந்த நிலையில், வெனிசுலாவிற்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்வது என்பது ரஷ்ய எண்ணெய் கடத்தல் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடும்,
மேலும் ரஷ்யாவுடன் தொடர்புடைய லடத்தல் கப்பல்களையும் ஐரோப்பா சிறைப்பிடிக்க இது வாய்ப்பாக அமையும் என எண்ணெய் கப்பல் போக்குவரத்து ஆய்வாளர் atias Togni எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |